அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை


அரசுப்பள்ளிகளில் கூடுதல்   ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
x

அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

திருப்பூர்

பல்லடம்

சமீபகாலமாக அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த 2 வருடங்களாக "கொரோனோ" தொற்று தாக்கத்தால், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கில வழிக்கல்வி இருப்பதும் முக்கிய காரணம்.

அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், கட்டடம், குடிநீர், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story