கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்


கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்
x

அத்தனாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 135 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியையாக மஞ்சுளா மற்றும் அசிரியையாக எபினேசர் ஆகிய இருவர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 135 மாணவ- மாணவிகளுக்கு 2 பேர் மட்டுமே பாடம் நடத்த வேண்டிய நிலை இருப்பதால் மாணவர்களின் படிப்பு பாகிக்கப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளியில் பயிலும் 135 மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story