கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலி:141 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்


கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலி:141 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியாக குறைந்தது.

தேனி

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த அணையில் பருவகாலத்துக்கு ஏற்ப நீர் மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதிப்படி வருகிற மே 31-ந்தேதி வரை அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில். கடந்த 26-ந்தேதி காலை 10 மணியளவில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 1,612 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. மேலும் மழைப்பொழிவு குறைந்ததால், அணையின் நீர் மட்டம் குறையத்தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று அணையின் நீர்மட்டம் 141.10 அடியாக குறைந்தது., நீர்வரத்து வினாடிக்கு 432 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,867 கனஅடியாகவும் இருந்தது.


Related Tags :
Next Story