இளங்கலை பட்டபடிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நேரடி கலந்தாய்வு


இளங்கலை பட்டபடிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நேரடி கலந்தாய்வு
x

இளங்கலை பட்டபடிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நேரடி கலந்தாய்வு

திருப்பூர்

முத்தூர்

காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை சிறப்பு நேரடி கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

அரசு கலைக்கல்லூரி

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காங்கயம் அரசு கலைக்கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.பி.ஏ., பி.ஏ.பொருளாதாரம், பி.காம், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய 7 பாட பிரிவுகள் அடங்கிய இளங்கலை மற்றும் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவ- மாணவிகள் சேர்க்கை சிறப்பு நேரடி கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

நேரடி கலந்தாய்வு

இதன்படி இந்த கல்லூரிகளில் இளங்கலை 7 பாட பிரிவுகளுக்கு நடைபெற உள்ள முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை சிறப்பு நேரடி கலந்தாய்வில் தமிழக அரசு உயர் கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் உத்தரவின்படி பி.சி, எம்.பி.சி, எஸ்.சி.ஏ,

பி.சி.எம் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பூர்த்தி செய்யப்படாத இடங்களுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்படும். மேலும் கல்லூரியில் ஏற்கனவே நடைபெற்ற முதல் மற்றும் 2, 3-ம் கட்ட கலந்தாய்வில் இளங்கலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டில் மொத்தம் உள்ள 340 இடங்களுக்கு 270 மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கை அனுமதி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலுவதற்கு ஏற்கனவே விண்ணப்பித்து உள்ள மற்றும் இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ள திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட நகர, கிராமப்புற ஏழை, எளிய மாணவ-மாணவிகள் அனைவரும் நாளை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து விண்ணப்பம் பெற்று அங்கேயே பூர்த்தி செய்து தங்களது ஆதார் அட்டை மற்றும் நகல், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பள்ளி மாற்று சான்றிதழ், மதிப்பெண்கள் பட்டியல், சாதி சான்றிதழ், 6 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் உள்பட உரிய ஆவணங்களுடன் நாளை காலை 10 மணிக்கு கல்லூரிக்கு நேரில் வந்து அனைத்து தரப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் நடைபெறும் சிறப்பு நேரடி கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர்க்கை பெற்று பயனடைய முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story