ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்


ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
x

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆதிகேசவ பெருமாள் கோவில்

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் சாமியை தரிசிக்க கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விடுமுறை நாளான நேற்று காலையில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அரச மூடு பிள்ளையார் கோவில் அருகில் இருந்தே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து இருந்து சாமியை தரிசனம் செய்தனர். இதற்காக தமிழ்நாடு பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரளாவில் இ்ருந்தும் அதிகமானவர்கள் வந்து இருந்தனர்.

போக்குவரத்து நெருக்கடி

இதனால் திருவட்டார் கோவில் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. திருவட்டார் பஸ் நிலையம் அருகில் இருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலை குறுகியதாக உள்ளது. கோவிலுக்கு ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்து இருந்தனர். அந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.

கோவிலில் முன்பு கார்த்திகை திருநாள் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் மட்டுமே லட்ச தீப விழா நடந்து வந்தது. கும்பாபிஷேகத்துக்கு பிறகு பக்தர்கள் விரும்பினால் கோவிலைச்சுற்றி உள்ள விளக்கணி மாடங்களில் எண்ணெய் விட்டு தீபமேற்றலாம் என அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று பத்மநாபபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் சார்பில் லட்ச தீபம் ஏற்றப்பட்டடது. இந்த தீப ஒளியில் கோவிலே ஜொலித்தது. மாலையிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story