ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவட்டார்:
புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புரட்டாசி 3-வது சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள். மேலும் புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளை தரிசிப்பது வெகு சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
இதையொட்டி புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையான நேற்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் நீண்ட வரிசயைில்...
இதையொட்டி கோவிலில் காலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மதியம் ஸ்ரீபலி பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆதிகேசவ பக்தர்
சங்க அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு அதிகளவிலான வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்ததால் கோவில் செல்லும் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய காலை, மாலை வேளைகளில் போலீசாரை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெருமாள் கோவில்களில்
இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆகியவற்றில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.