ஆதிதிராவிடர் காலனியில் பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம்


ஆதிதிராவிடர் காலனியில் பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம்
x

செம்பட்டிவிடுதி அருகே ஆதிதிராவிடர் காலனியில் பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

உண்ணாவிரத போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே மணவிடுதி ஊராட்சியில் ஆதிதிராவிட காலனி உள்ளது. இந்த காலனியில் 1965-ம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசால் 13 ஆதிதிராவிடர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தலா 5 ஏக்கர் மற்றும் தலா ரூ.5 ஆயிரம் வீதமும் என ஒதுக்கப்பட்ட தற்காலிக பட்டாவை நிரந்தர பட்டவாக மாற்றிதரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு டாக்டர் அம்பேத்கர் நலச்சங்க மாநில தலைவர் ஓ.என்.எஸ். ராஜன் தலைமை தாங்கினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் பலமுறை பல்வேறு அதிகாரிகளுக்கு இது தொடர்பாக புகார் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்காலிக பட்டாவை நிரந்தர பட்டாவாக மாற்றிதரக்கோரியும், பட்டா வழங்க முடியவில்லை எனில் அதற்கான காரணத்தை வருவாய்த்துறை சார்பாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மாரிக்கண்ணு, ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மை தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story