பிற திட்டங்களுக்கு ஆதி திராவிடர் துணை திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை : தமிழக அரசு விளக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆதி திராவிட துணை திட்ட நிதி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்ல்லை என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
சென்னை,
பிற நிதி திட்டங்களுக்காக ஆதி திராவிடர் நிதி பயன்படுத்தப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு கூறுகையில், பட்டியலினத்தவர்கள் நலனில் அரசு உறுதியாக உள்ளது. துணை திட்ட நிதி செலவினத்தை கண்காணிக்க நிதித்துறையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. துணை திட்ட நிதியை ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மட்டுமே செலவிட இயலும் என்று தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆதி திராவிட துணை திட்ட நிதி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்ல்லை எனவும் தமிழக அரசுதெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story