ஆதிதிராவிடர்-பழங்குடியினர் பெட்ரோல் நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெட்ரோல் நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெட்ரோல் நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெட்ரோல் நிலையம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
இந்த திட்டத்தில் பயன் பெற www.petropukmpdealer chavan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் வருகிற 27-ந் தேதிக்குள்(புதன்கிழமை) விண்ணப்பிக்கலாம்.
பெட்ரோல் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல், டீசல் (ஒரு டேங்கர்) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலம் கடனாக வழங்கப்படும்.
கூடுதல் விவரங்கள்
பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர் (திட்டங்கள்) செல்போன் எண்; 7358489990-ல் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவாரூர், நாகை பைபாஸ் சாலை, அரசு பஜாஜ் ஷோரூம் அருகில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் தொலைபேசிஎண் 04366250017 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.