100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்க ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்க ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்க ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்க ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

100 சதவீத மானியத்தில் கிணறுகள்

தமிழ்நாடு அரசின் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 2022-23-ம் நிதி ஆண்டிற்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள தனிப்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கிணறுகள் (ஆழ்துளை அல்லது குழாய் கிணறு) அமைக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட, பழங்குடியின சிறு மற்றும் குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு ஒன்று முதல் 5 ஏக்கர் வரை நிலப்பரப்பு இருக்க வேண்டும்.

இந்த நிலப்பரப்பிற்கு ஏற்கனவே எந்தவித நீர் ஆதாரமும் இருக்க கூடாது. நிபந்தனைக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு (ஆழ்துளை கிணறு) மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு மின் மோட்டார் வழங்கப்படும். மேலும் வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறை மூலம் நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூர், தெள்ளார், சேத்துப்பட்டு, அனக்காவூர், ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் ஆரணி உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல் துறை) அலுவலகத்திலும்,

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், கலசபாக்கம், போளூர், ஜவ்வாதுமலை, செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு, ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் திருவண்ணாமலை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல் துறை) அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் மூலமும் விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story