திருச்செந்தூரில் ஆதிதிராவிடர் பறையர் சமுதாய நலச்சங்க கூட்டம்
திருச்செந்தூரில் ஆதிதிராவிடர் பறையர் சமுதாய நலச்சங்க கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பாராளுமன்ற தொகுதி ஆதிதிராவிடர் பறையர் சமுதாய நலச்சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்லைவர் பட்டணம் கணேசன் தலைமை தாங்கினார்.
ஆலோசனை கூட்டத்தில், திருச்செந்தூரில் ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட 79 சென்ட் நிலம் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தலைமையில் தாசில்தார் வாமனன் முன்னிலையில அளக்கப்பட்டது. மேற்கொண்டு இது சம்பந்தமாக 1-9-2023 உதவிகலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இதன் முடிவு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே அன்றய தினம் ஆதிதிராவிடர் பறையர் சமுதாய சங்க பொறுப்பாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது
கூட்டத்தில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் முதுநிலை பணியாளர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் தோப்பூர் சேகர், உடன்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினர் அன்புராணி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலச்சங்க தலைவர் பிரேம்குமார், அகில இந்திய தலித் மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் சின்னத்துரை பாண்டியன், சங்க சட்ட ஆலோசகர் அரசூர் ராஜ்குமார், சங்க துணை தலைவர் ராஜாநேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.