ஆதிமாசாணி அம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆதிமாசாணி அம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை வேட்டார்குளம் அருகில் ஆதிமாசாணிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பூக்குழி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர்.
தலைமை நிர்வாகி மாசாணி சின்னமாயன், நிர்வாகிகள் கலாராணி, சிவராஜா, மாசாணிராஜா, கங்கேஸ்வரி, சவுந்தரபாண்டி உள்பட பக்தர்கள் மேளதாளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று சக்திகரகம் அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. அங்கிருந்து தலைமை நிர்வாகி மாசாணி சின்னமாயன் சக்திகரகம் எடுத்து வந்தார். வழிநெடுக பெண்கள் சக்திகரகத்திற்கு அபிஷேகம் செய்தனர். நேற்று காலை பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் மன்னாடிமங்கலம் ராஜபாண்டி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.விழா ஏற்பாடுகளை ேகாவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.