ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்
ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்
திருவாரூர் பிடாரி கோவில் தெருவில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி காகிதகார தெரு சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் இருந்து ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் தொடங்கி வடக்குவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திரளான பக்தர்கள் நேரடியாக கோவில் கருறைக்கு சென்று ஆதிபராசக்தி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் வாசன், திருவாரூர் சக்தி பீட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் முத்துவேல், வட்ட தலைவர் கமல்ராஜ், பேராசிரியர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் நகரமன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.