ஆதிதமிழர் பேரவை ஆர்பாட்டம்


ஆதிதமிழர் பேரவை ஆர்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2023 1:00 AM IST (Updated: 27 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:-

தர்மபுரி மாவட்ட ஆதிதமிழர் பேரவை சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் ஒன்றிய செயலாளர் புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அருந்ததியர் சமுதாய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகிகள் சக்திவேல், சுதாகர், அன்பு, ராமஜெயம், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் ராஜ்குமார், அமைப்பு செயலாளர்கள் சக்திவேல், மாவட்ட கவுரவ தலைவர் மாசிலாமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சீமானை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய நிர்வாகி சசிகுமார் நன்றி கூறினார்.


Next Story