ஆதித்தனார் கல்லூரியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ஆதித்தனார் கல்லூரியில்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கடந்த 1977-1980-ம் ஆண்டு வணிக நிர்வாகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், வணிக நிர்வாகவியல் துறை முன்னாள் தலைவர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

முன்னாள் பேராசிரியர்கள் ஆழ்வார், ஜெயக்குமார் பொன்ராஜ் ஆகியோர் இணையவழியில் பேசினர். முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த பேராசிரியர்களை கவுரவித்தனர். தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர் நிக்கல்சன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், ஐ.எம்.எப். நிறுவன அதிகாரியுமான சாமுவேல் மதுரம் செய்து இருந்தார். முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் சிலைக்கும், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் முன்னாள் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர்.


Next Story