ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது


ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்பது மீண்டும் நாட்டில் குலதொழிலை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்தியாவில் சமூகநீதியை சிதைக்கும் சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் கோட்டார் ெரயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் கோட்டார் ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது ஆதித்தமிழர் கட்சியினர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, அந்தப் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story