ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம்; 7 பேர் கைது
பாளையங்கோட்டையில் ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட ஆதித்தமிழர் கட்சியினர் நேற்று காலையில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாநில தூய்மை பணியாளர் அணி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் இளையராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி தமிழரசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழக ஆளுனரை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பிரதமரின் உருவப்படத்தை எரிக்க முயற்சி செய்தனர். இதனால் போலீசார் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாநகர செயலாளர் இளையராஜா உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story