ஆதிவாசி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆதிவாசி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி கொரவயல் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மன்னன். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 21). இந்தநிலையில் மண்வயல் மாதேஸ்வரர் கோவில் திருவிழாவுக்கு அனைவரும் சென்றிருந்தனர். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, சுரேஷ்குமார் வீட்டின் ஜன்னல் கம்பியில் துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் கூறும்போது, சுரேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றனர். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.