ஆதிவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
கோவில்பட்டி ஆதிவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மேலத்தெரு ஆதி விநாயகர், வள்ளி-தேவசேனா சுப்பிரமணிய சுவாமி, காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கோபுரகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து சன்னதியில் ஆதி விநாயகர், வள்ளி- தேவசேனா சுப்பிரமணிய சுவாமி, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் இ. கருப்பசாமி, செயலாளர் சொர்ணமுத்து, பொருளாளர் முத்துப்பாண்டியன், கௌரவத் தலைவர்கள் டி.செல்லப்பா, ஜி. கிருஷ்ண மூர்த்தி, ஊர் தலைவர் ராசு பாண்டியன், செயலாளர் பூல்பாண்டியன், பொருளாளர் மகேந்திரன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story