திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆதரவற்ற 3 பேர் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு


திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆதரவற்ற 3 பேர் முதியோர் இல்லத்தில் சேர்ப்பு
x

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆதரவற்ற 3 பேர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 70 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களான அய்யப்பன், மோகனாம்பாள், கருப்பாயி ஆகிய 3 பேரும் உடல்நலக்குறைவால் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் 3 பேரும் குணமடைந்த நிலையில், நேற்று ஆறுமுகநேரி சீனந்தோப்பில் உள்ள லைட் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் 3 பேருக்கும் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலா ரூ.1000 மற்றும் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி, டாக்டர் பாபநாசகுமார், லைட் முதியோர் இல்ல தலைவர் பிரேம்குமார், செயலாளர் ஜோன்டேனியல், பொருளாளர் திவாகரன், தி.மு.க. 24-வது வார்டு செயலாளர் ஜெ.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story