அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை,
அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
ஒரு உறுப்பினர் விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளலாம். அதிமுகவில் உறுப்பினர்களாக சேர விரும்புவோர் ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story