முதுகலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை
புத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
கொள்ளிடம்:
புத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதுகலை மாணவர் சேர்க்கை
கொள்ளிடம் அருகே புத்தூரில் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 2022-2023-ம் ஆண்டு முதுகலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று உயர்கல்விதுறை அறிவித்துள்ளது.
3 பாட பிரிவுகள்
அதனைத் தொடர்ந்து புத்தூர் அரசு கல்லூரியில் முதுகலை தமிழ், அறிவியல் மற்றும் முதுகலை கணிதம் ஆகிய பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளதால் மேற்கண்ட இந்த 3 பாடப்பிரிவுகளில் மட்டும் சேர்ந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் www.tngasapg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இக்கல்லூரியில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.