அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்


அ.தி.மு.க. 51-வது ஆண்டு  தொடக்க விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டப்பட்டது

தென்காசி

கடையம்:

கடையத்தில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடையம் வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் சார்பாக கிளை கழகங்களில் கொடி ஏற்றியும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில், அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன், ஏற்பாட்டிலும், தெற்கு மாடத்தூர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மகளிர் அணிச் செயலாளர் சந்திரகலா, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவசீதாராம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சவுந்தரராஜன், ராமதுரை, கடையம் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர் ஜனதா காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாரியப்பன் நன்றி கூறினார்.


Next Story