அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உள்பட 6 பேர் கைது


அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உள்பட 6 பேர் கைது
x

அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உள்பட 6 பேர் கைது

திருவாரூர்

வீடு இடித்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்

மன்னார்குடி கீழ பாலம் பகுதி கீழ்மேல் ராஜாம்பாளையத்தெருவை சேர்ந்தவர் கோபி (வயது50). இவர் அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆவார். மந்தக்கார தெருவை சேர்ந்த செல்வபூபதி (50) என்பவர் கீழ்மேல் ராஜபாளையம் தெருவில் பழைய ஓட்டு வீட்டை விலைக்கு வாங்கி இருந்தார். அதன் அருகில் உள்ள மற்றொரு ஓட்டு வீட்டை கோபி விலைக்கு வாங்கி இருந்தார்.

கடந்த 17-ந்தேதி கோபி மற்றும் 5 பேர் பொக்லின் எந்திரங்களை மூலம் செல்வபூபதிக்கு சொந்தமான ஓட்டுவீட்டின் சுவரை இடித்துள்ளனர்.

6 ேபர் கைது

இதுகுறித்து செல்வபூபதியின் தந்தை வேலாயுதம் மன்னார்குடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்ட பொக்லின் எந்திர டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கோபியை போலீசார் தேடி வந்தனர். நேற்றுமுன்தினம் தலைமறைவாக இருந்த கோபியை மன்னார்குடி போலீசார் கைது செய்து குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் செய்தனர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை யடுத்து நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story