அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
திருவாடானையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் ஆனிமுத்து தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். திருவாடானை நகர செயலாளர் ராமநாதன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் திருவாடானை ஒன்றியத்தின் சார்பில் 4 ஆயிரம் பேர் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய நகர கிளைக்கழக நிர்வாகிகள், சார்புஅணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தொண்டி நகரச் செயலாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story