அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி மடப்புரத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் பாலதண்டாயுதம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு வரவேற்றார். அமைப்புச் செயலாளர்கள் சிவ.ராஜமாணிக்கம், முன்னாள் எம் பி. கோபால், நகர செயலாளர் சண்முகசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களான அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விட்டது. இதனால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றார். கூட்டத்தில் நகர அவை தலைவர் அன்பரசன், வக்கீல் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.