அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு, திங்கட்கிழமை அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்: எஸ்.பி. சண்முகநாதன்


அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு, திங்கட்கிழமை   அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்: எஸ்.பி. சண்முகநாதன்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு, திங்கட்கிழமை அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என்று எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க 51-வது ஆண்டு தொடக்க விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்ட கழகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகள் மற்றும் ஒன்றிய கழகத்துக்கு உட்பட்ட அனைத்துக் கிளைக் கழகங்கள் மற்றும் சிற்றூர்களில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. கொடியை ஏற்றியும், அந்த இடத்தில் கழகத்தின் கொள்கை பாடல்களை ஒலி பெருக்கி மூலம் ஒலிக்கச் செய்தும், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியும் அ.தி.மு.க.வினர் கொண்டாட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, மாநகர பகுதி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், வருகிற 18-ந் தேதி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே எம்.ஜி.ஆர். திடலில் மாலை 5 மணிக்கு மாபெரும் கழக ஆண்டு விழா பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பி.ஜி.ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன், தலைமைக் கழக பேச்சாளர்கள் எஸ்.ஜீவா கணேசன், தீப்பொறி அப்பாதுரை ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, மாநகர பகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story