அ.தி.மு.க., அ.ம.மு.க. கவுன்சிலா்கள் உள்ளிருப்பு போராட்டம்


அ.தி.மு.க., அ.ம.மு.க. கவுன்சிலா்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா படம் வைக்கக்கோரி அ.தி.மு.க., அ.ம.மு.க. கவுன்சிலா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா படம் வைக்கக்கோரி அ.தி.மு.க., அ.ம.மு.க. கவுன்சிலா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றியக்குழு கூட்டம்

பாபநாசம் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடந்தது. பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் , கிராம ஊராட்சி வட்டார அலுவலர் சுதா, ஒன்றியக்குழு துணை தலைவர் தியாக. பழனிச்சாமி , மாவட்ட கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சாலை வசதி, மின் வசதி , அங்கன்வாடி கட்டிடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதி திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித்தரப்படும் என தலைவர், அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

மேலும் முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் படம் மற்றும் பிற தலைவர்களின் படங்களை ஊராட்சி ஒன்றிய கூடத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ.தி.மு.க ,அ.ம.மு.க. கவுன்சிலர்கள் பேசினார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோரிக்கை வைத்து வருவதாகவும், அ.தி.மு.க. வை சேர்ந்த ஒன்றியக்குழு துணை தலைவர் தியாக பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கோபிநாதன், முருகன், அமுதா, மற்றும் அ.ம.மு.க. கவுன்சிலர் அன்பழகன் ஆகியோர் அலுவலகத்தின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் , ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சி வட்டார அலுவலர் சுதா ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் வருகிற 30-ந் தேதிக்குள்(ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் முதல்- அமைச்சர்கள் படம் வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story