அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா


அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
x

தென்காசி நகரசபை கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா

தென்காசி

தென்காசி நகரசபை கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் பாரி ஜான், என்ஜினீயர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல கவுன்சிலர்கள் சீரான குடிநீர், சாலை வசதி, வாறுகால் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டு மனு கொடுத்தனர். சுகாதார துறையில் பணியாளர்கள் அதிகமாக இருந்தும் குறைவான பணியாளர்களே பணியில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டி அ.தி.மு.க‌. மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். அப்போது அவர்களிடம் தலைவர் சாதிர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். அதன் பின்னர் அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.


Next Story