முன்ஜாமீன் கேட்டு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மனு


முன்ஜாமீன் கேட்டு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மனு
x

மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மனு தாக்கல் செய்தார்.

மதுரை

மதுரை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டம் வெங்கமேடு அண்ணா சிலை அருகில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இதற்காக மதுரை ஐகோர்ட்டில் அனுமதி பெற்று இருந்தோம். ஆர்ப்பாட்டத்தில் 200 பேர் மட்டும் பங்கேற்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தின் போது 1300 பேர் கூடியதாக வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் என் மீதும், அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் மதுரை ஐகோர்ட்டு நிபந்தனையை மீறியதாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் எனக்கு முன்ஜாமீன் கேட்டு இந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளேன். என் மனுவை ஏற்றுக்கொண்டு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Related Tags :
Next Story