அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி


அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஒன்றாக மது அருந்தினர்

பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம், நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42). முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர். தற்ேபாது மரம்வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மணிகண்டனும், அவருடன் வேலை செய்யும் செல்வின் பெர்னால்டு (37), பிரேம், மனோசீஸ் ஆகியோரும் நாவல்காடு பகுதியில் உள்ள சிவன்கோவில் பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். மதுபோதையில் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.

கத்தியால் கழுத்தை அறுத்தனர்

அப்போது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கத்தியால் மணிகண்டனின் கழுத்தை அறுத்தனர். அத்துடன் வயிறு உள்ளிட்ட பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதனால் மணிகண்டன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து பொதுமக்கள் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒருவர் கைது

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலை ெதாடர்பாக இவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது மீண்டும் தகராறு ஏற்பட்டு மணிகண்டனை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக செல்வின் பெர்னால்டுவை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். மது போதையில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் கவுன்சிலரை கழுத்தை அறுத்து ெகால்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story