அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்


அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வைத்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார்.

அவைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர்கள் வீரபாண்டியன், பசுவதி, ஒன்றிய செயலாளர்கள் சங்கர பாண்டியன், அமல்ராஜ், ஜெயக்குமார், இருளப்பன், பாலகிருஷ்ணன், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், நகர செயலாளர்கள் சுடலை, சக்திவேல், பேரூர் கழகச் செயலாளர் கார்த்திக் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story