அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ராணிப்பேட்டை

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் அ.தி.மு.க. தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

இதில் சோளிங்கர் நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன், நகர அவைத் தலைவர் ஞானமூர்த்தி, நகர பொருளாளர் மணிகண்டன், வேலு மற்றும் வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாணியம்பாடி, உதயேந்திரம், ஆலங்காயம் பகுதி அ.தி.மு.க.வினரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். டி. எம்.ரவி, ஆர்.ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் எஸ்.எம்.எஸ்.சதீஷ், தம்பாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Related Tags :
Next Story