அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தூத்துக்குடி
அ.தி.மு.க பொதுச்செயலாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும், ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும், முடிவுகளையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி டூவிபுரத்தில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதே போன்று தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநில அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையிலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் பழைய பஸ்நிலையத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி
இதேபோன்று ஆழ்வார் திருநகரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் நகர அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம்
தூத்துக்குடி தெற்குமாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் முத்துராமலிங்க தேவர் சிலை முன்பாக அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் காசிராஜன் முன்னிலை வகித்தார். இதில், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.