மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

காரியாபட்டியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

காரியாபட்டியில் மின் கட்டண உயர்வை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மணிமேகலை, எதிர்கோட்டை சுப்பிரமணியன், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நாலூர் பூமிநாதன், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன், மாவட்ட பேரவை செயலாளர் மச்சேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தோழமைக்கட்சி

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அரசு எந்த ஒரு திட்டத்தையும் கடந்த 15 மாதங்களில் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த குண்டாறு இணைப்பு திட்டம், மத்திய அரசு அனுமதி வழங்கியும் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது.

மின் கட்டண உயர்வு அடித்தட்டு மக்களை மிகவும் பாதித்து உள்ளது. பா.ஜ.க. எங்களின் தோழமைக்கட்சி. அவர்களின் செயல்பாடு நன்றாக உள்ளது. தோழமைக் கட்சி வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஜெயலலிதா இருந்த போது எப்படி தனித்து நின்று 136 இடங்களை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தோமோ அந்த அளவுக்கு எங்களை வளர்த்து கொள்வது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story