அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்


அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வார்டுகளை புறக்கணிப்பதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரீன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கடந்த மாத கூட்டத்தில் உழவர் சந்தை பகுதியில் தலைவர் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஆணையாளர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த கூட்டத்தில் மீண்டும் அதுதொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் சரவணகுமார் மீண்டும், மீண்டும் ஏன் இதுகுறித்து பேசுகிறீர்கள், மக்கள் பிரச்சினைகளை பேச விடுங்கள் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தி.மு.க.-அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தங்களை மன்ற கூட்டத்தில் பேச விடுவது இல்லை என்றும், தங்களது வார்டுகளை புறக்கணிப்பதாகவும் கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேஜை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தாமல் வெளியேறினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story