அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு:அ.தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கொண்டாட்டம்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் டூவிபுரத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வக்கீல் வீரபாகு, ஒன்றிய செயலாளர் காசிராஜன், முன்னாள் அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு நகரச் செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட இணை செயலாளர் பேச்சியம் மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, வரத்தக அணி மாவட்ட செயலாளர் ராமர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
எட்டயபுரம் நகர அ.தி.மு.க சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர அ.தி.மு.க செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
உடன்குடி
உடன்குடியில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அங்குள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யூனியன் கவுன்சிலர் முருங்கைமகாராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி பஜாரில் ஒன்றிய செயலர் த.தாமோதரன் தலைமையில் நகர செயலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். இதேபோன்று நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் மற்றும் கே. வி. கே. சாமி சிலை அருகே நகர அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
கழுகுமலை
கழுகுமலையில் நகர அ.தி.மு.க. சார்பில் நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி தலைமையில் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கழுகுமலை நகர துணை செயலாளர் அந்தோணி பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவ பாண்டியன், நகர செயலாளர் குமரகுருபரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.