ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழுவுக்கு அ.தி.மு.க.வில் கூடுதலாக 6 பொறுப்பாளர்கள் நியமனம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் களம் இறக்கப்பட இருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். சற்று நேரத்தில் மேலும், 5 பேர் அதில் இணைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று கூடுதலாக 6 பேர் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், அமைப்பு செயலாளர்கள் கே.கோபால், எஸ்.வளர்மதி, டி.ரத்தினவேல், எஸ்.ஆசைமணி, சிவா.ராஜமாணிக்கம், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.