அ.தி.மு.க. ஆட்சியில்தான் மருத்துவம், சட்டம், கலைக் கல்லூரிகள் ராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டன- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
அ.தி.மு.க. ஆட்சியில்தான் மருத்துவம், சட்டம், கலைக் கல்லூரிகள் ராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டன என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
பனைக்குளம்-
அ.தி.மு.க. ஆட்சியில்தான் மருத்துவம், சட்டம், கலைக் கல்லூரிகள் ராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டன என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
பொதுகூட்டம்
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுகூட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றியம் சார்பில் உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் முன்னாள் நகராட்சி தலைவர் ராமமூர்த்தி, ராமேசுவரம் நகர செயலாளர் கே.கே.அர்ஜுனன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர்ஆர்.ஜி.மருதுபாண்டியன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ராமநாதபுரம் நகரசெயலாளர் பால்பாண்டியன், முன்னாள் நகர் செயலாளர் கே.சி.வரதன், மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், பொதுக்குழுஉறுப்பினர் கானிதாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை மண்டபம் ஒன்றிய செயலாளர் பி.கே.சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. மருத்துவர் அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் மணிகண்டன், அ.தி.மு.க. பேச்சாளர்கள் சிங்கமுத்து, பழனிகுமார், மாவட்ட அ.தி.மு.க. தலைவர் சாமிநாதன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் கவிதா சசிகுமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிறைவேற்றவில்லை
இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசும்போது கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் பல்வேறு அரசு திட்டங்களை கொண்டு வந்த பெருமை எங்களுக்கு உண்டு. குறிப்பாக மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, ராமேசுவரத்தில் கலைக் கல்லூரி கொண்டு வரப்பட்டன. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் கடன் ரத்து என பெயரளவில் மட்டும் அறிவித்து அதை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவச பஸ் பயணம் என அறிவித்து பஸ்க்காக காத்திருக்கக்கூடிய பெண்களை பார்த்தவுடன் பஸ் நிற்காமல் சென்று விடுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கி சாதனை படைத்த ஆட்சிதான் அ.தி.மு.க. தற்போது அம்மா உணகவத்தையும் மூடிவிட திட்டம் தீட்டி வருகின்றனர். தற்போது தி.மு.க. அரசு மீது தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் தர்வேஸ், மீனவர் அணி செயலாளர்அருள், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, மகளிர் அணி செயலாளர், முன்னாள் கவுன்சிலர் ஜெய்லானி சீனிகட்டி, மருத்துவ அணி தலைவர் இளையராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மண்டபம் ஒன்றிய முன்னாள் செயலாளர் பாம்பன் முத்தாண்டி, முன்னாள் தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ், கவுன்சிலர் அலெக்ஸ், மண்டபம் முன்னாள் நகர செயலாளர் முகமது யூசுப், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் நாகராஜன், மண்டபம் பேரூர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஜாகீர் உசேன், மண்டபம் ஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், முன்னாள் கவுன்சிலர் கே.கே.ராஜேந்திரன், பாம்பன் அலெக்ஸ் ஆகியோர் நன்றி கூறினர்.