அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் திடீர் நிறுத்தம்


அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் திடீர் நிறுத்தம்
x

ஈ.சி.ஆர். விஜிபியில் அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் திடீர் நிறுத்தப்பட்டது.

சென்னை,

அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்க மீண்டும் பொதுக்குழு கூட்டப்படவேண்டுமென முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இதனை தொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அதிமுக தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தும் ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தமாதம் நடைபெற்ற உள்ள பொதுக்குழுவை வானகரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பின்னர் மீனம்பாக்கம், ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடத்தலாம் என பரிசீலிக்கப்பட்டது.

பின்னர் சென்னை ஈசிஆர் வி.ஜி.பி.யில் பொதுக்குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுக்குழு நடைபெறும் இடத்தை தயார் செய்யும் பணிகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அந்த பணிகளை பார்வையிட்டு வந்தனர்.

இந்நிலையில், ஈ.சி.ஆர். விஜிபியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இன்று திடீரென நிறுத்தப்பட்டது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரொனா கட்டுப்பாடு இருப்பதால் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றும் இடம் தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.


Next Story