அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் நெல்லியாளம் நகராட்சியில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) செலுத்தியதற்கான ஆவணத்தை ஒப்பந்தம் கோரும் போது இணைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்படும் என டெண்டர் கடிதத்தில் மாற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த விதியை மாற்றி அமைக்க கோரியும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கவுன்சிலர் ஜாபிர் தலைமை தாங்கினார். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, தேவலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருங்கால வைப்பு நிதி செலுத்தாத ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் விஜயன், விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story