வெவ்வேறு விபத்துகளில் அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

அ.தி.மு.க. கிளை செயலாளர்

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் அருகே உள்ள பழூர் காந்திநகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 41). வேன் டிரைவரான இவர் பழூர் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவர் நேற்று காலையில் வேனில் முருங்கபேட்டையிலிருந்து திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு சேலத்தில் நடந்த ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

வேன் கணவனூர் அருகே சென்றபோது, கரூர் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், கணேசன் ஓட்டி வந்த வேன் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன், முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (42), பவுத்திரன் (10), வேம்பு (62), ரம்யா (31), கார்த்திகாயினி (5), சுதா (48), சக்தி (20) ஆகிய 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

சாவு

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கணேசன் மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனியை சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் லட்சுமணதாஸ் (வயது 23). நேற்று முன்தினம் இவர் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Related Tags :
Next Story