கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2022 12:15 AM IST (Updated: 26 July 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மின் கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கெகண்டுபேசினார்.

கிருஷ்ணகிரி

மின் கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கெகண்டுபேசினார்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், சமரசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. துணை பொது செயலாளருமான கே.பி.முனுசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

திரும்ப பெற வேண்டும்

கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் 100 யூனிட் மின்சாரம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தற்போதைய தி.மு.க., அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழக மக்களின் மின்தேவைக்கு போக உபரி மின்சாரம் வெளியில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கே மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு அடிக்கடி அறிவிப்பு இல்லாமல் மின்தடை செய்யப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பால் பொதுமக்கள் பொருளாதாரத்தை இழந்துள்ள நிலையில், சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது மேலும் வேதனை அளிக்கும் செயல். எனவே மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பால்வளத் தலைவர் தென்னரசு, ஒன்றியக் குழுத் தலைவர் அம்சா ராஜன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், பையூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, சிறுபான்மைப் பிரிவு சாகுல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story