திருவேங்கடத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


திருவேங்கடத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் மெயின் பஜாரில் உள்ள காந்தி மண்டபம் முன்பாக அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் பாலமுருகன், அவை தலைவர் ராஜசேகரன், முத்தையா, நிர்மலா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் காளிதாஸ், ஒன்றிய அவை தலைவர் நாராயணசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் செல்வராஜ், குருவிகுளம் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் செந்தில், பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரிகனி, சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story