திருச்செந்தூரில் அ.தி.மு.க. பொதுக் கூட்டம்


திருச்செந்தூரில் அ.தி.மு.க. பொதுக் கூட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் அ.தி.மு.க. பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர செயலாளர் காயல் மவுலானா முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமை கழக பேச்சாளர்கள் தாஜ்குமாரி, நாஞ்சில் எம்.மாதேவன் ஆகியோர் பேசினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், காயல்பட்டினம் பனை வெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் எம்.ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story