தூத்துக்குடியில் புதன்கிழமை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் புதன்கிழமை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:15 AM IST (Updated: 20 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் புதன்கிழமை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. அரசின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதேபோன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன், என தெரிவித்துள்ளார்.


Next Story