"எங்கள் முழு ஆதரவு உண்டு..." - டெல்லியில் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி


எங்கள் முழு ஆதரவு உண்டு... - டெல்லியில் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி
x

டெல்லியில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது கூட்டணி கட்சியினர் உடன் இருந்தால் சிறப்பாக இருக்கும் ஆகையால் டெல்லிக்கு வருமாறு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிடபொறுப்பாளர் சிடி ரவி நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றார். பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதன்பின்னர், டெல்லியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உடன் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரி ஓ.பன்னீர் செல்வத்தை திரவுபதி முர்மு சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், நடைபெற உள்ள இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான பாஜக வெற்றி வேட்பாளரான திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக எங்களின் முழு ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது என்பதை மனப்பூர்வமாக இதயப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

திரவுபதி முர்மு சென்னைக்கு வருறேன் என கூறியுள்ளாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், திரவுபதி முர்மு சென்னை வருகிறேன் என்று கூறியுள்ளார்' என்றார்.

இதற்காக தனியாக எம்.எல்.ஏ. கூட்டம் எதேனும் ஏற்பாடு செய்ய உள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்கவில்லை.




Next Story