வைத்தியநாதசுவாமி கோவிலில் அ.தி.மு.க.வினர்தங்கத்தேர் இழுத்து வழிபாடு


வைத்தியநாதசுவாமி கோவிலில் அ.தி.மு.க.வினர்தங்கத்தேர் இழுத்து வழிபாடு
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு வைத்தியநாதசுவாமி கோவிலில் அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு வைத்தியநாதசுவாமி கோவிலில் அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

வைத்தியநாதசுவாமி கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்து குமாரசாமி, தன்வந்திரி, செவ்வாய் (அங்காரகன்) ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவர் நீடுழி வாழ வேண்டியும், மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக வரவேண்டி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.

தங்கத்தேர்

மாவட்ட அவை தலைவர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் கழக செயலாளர் போகர் ரவி வரவேற்றார். நிகழ்ச்சியில் தங்கத்தேரில் அலங்கரித்து வைக்கப்பட்ட முருகப்பெருமான் தேரை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நான்கு உட்புற வழியாக வலம்வந்து தேர் மீண்டும் சாமி சன்னதியை அடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சந்திரசேகரன், ரவிச்சந்திரன், சீர்காழி நகர கழக செயலாளர் வினோத், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், ஒன்றிய துணை செயலாளர் திருமாறன், பால் கூட்டுறவு சங்க தலைவர் அஞ்சம்மாள், துணைத்தலைவர் பார்த்தசாரதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜகார்த்தி, அ.தி.மு.க. நிர்வாகிகள் அருள்குமார் ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story