அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்


அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்
x

சோளிங்கரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ராணிப்பேட்டை

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனை வரவேற்று சோளிங்கர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில்பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமு, நகர பொருளாளர் மணிகண்டன், நகர அவைத்தலைவர் ஞானமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜி.சம்பத் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் அ.தி.மு.க.ஒன்றிய நிர்வாகிகள் ஆதிமூலம், சம்பத், மற்றும் நகர நிர்வாகிகள் வாசு, வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story