சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பார்களா அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? - தலைமை செயலகம் வருகை...!
சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால், நேற்றைய சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு தற்போது வருகை தந்துள்ளனர்.
சட்டசபை காலை 10 மணிக்கு கூட உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். சபாநாயகர் அப்பாவு-வை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தற்போது சந்தித்துள்ளனர். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்துள்ளனர்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து சபாநாயகர் அப்பாவு-வை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுத்துள்ள முடிவு என்ன என்பதை பொறுத்தே சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பார்களா? புறக்கணிப்பார்களா? என்பது குறித்து தெரியவரும்.